அரசு பள்ளி‌யி‌ல் 100 ‌விழு‌க்காடு தேர்ச்சி தான் உண்மையான சாதனை: அமைச்சர் ராஜா!

புதன், 16 ஜூலை 2008 (09:50 IST)
''அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ூறு சதவீதம் தேர்ச்சி பெற செய்வதே உண்மையான சாதனை'' என தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பேசினார்.

ஈரோடு அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள் ஆகியவை இணைந்து ஒரு திருமண மண்டபத்தில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடினார்கள்.

விழாவிற்கு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியது: கவுந்தப்பாடி பகுதியில் உள்ள இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இரண்டு தொடக்கப்பள்ளிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கிராம கல்விகுழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தகல்வி குழுக்கு என் குடும்பத்தின் சார்பாக ரூ. 5 லட்சம் வழங்குகிறேன். இதுதவிர இங்கு உள்ள ஆசிரியர்கள் வருடத்திற்கு ரூ.100 உங்களால் முடிந்தால் கொடுக்கலாம்.

தற்போது தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கட்டிடம் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அரசு பள்ளியில் 30 ‌விழு‌க்காடு மட்டும் தேர்ச்சி விழுக்காடாக இருக்கும்.
ஆனால் தற்போது 90 ‌விழு‌க்காடு உயர்ந்துள்ளது.

தனியார் பள்ளிகள் காட்டும் தேர்ச்சி விகிதத்தை நாம் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் அவர்கள் நன்றாக படிக்கும் குழந்தைகளை மட்டுமே சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளையும் சேர்த்து அவர்களை படிக்க வைக்கிறோம். அரசு பள்ளியில் ூறு ‌விழு‌க்காடு தேர்ச்சி பெற செய்வதே உண்மையான சாதனையாகும். இதற்கு ஆசிரியர்கள் பாடுபடவேண்டும் எ‌ன்று அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்