மாணவ‌ர்க‌ள் அரசியலுக்கு வரவேண்டாம்: இளங்கோவன்!

சனி, 12 ஜூலை 2008 (14:18 IST)
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என யாரும் முடிவு செய்துவிடாதீர்கள் என மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேறிஞர் அண்ணா ூற்றாண்டு நினைவு கட்டிடத்தை மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியது:

பள்ளியில் படிக்கும் மாணவிகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. மாணவிகள் தங்கள் வாழ்க்கையை உயர்த்த ஆண்களுக்கு இணையாக மாற ஆண்களை நம்பி இருக்கும் நிலை மாறவேண்டும். அதற்கு நன்றாக படித்து நீங்கள் சம்பாதிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மாணவ, மாணவிகள் மருத்துவராகவும், பொறியாளராகவும், ஆட்சியாளராகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும் ஆகவேண்டும் என ஆர்வம் இருப்பதாக கூறினீர்கள். இதை வரவேற்கிறேன். எக்காரணத்தை கொண்டும் அரசியல்வாதியாக ஆகவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உங்களுக்கு வரவேண்டாம். ஏனெனில் நாங்கள் அதன் கஷ்டத்தை உணர்ந்துகொண்டுள்ளோம் எ‌ன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

விழாவில் மாநில கைத்தறிதுறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா ஆய்வுகூட கட்டிடத்தை திறந்துவைத்து பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்