பரமக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டது மன்மோகன்சிங் அரசின் ஏற்பாட்டின்படி நடக்கும் நாடகமாகும். மத்திய அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் மன்மோகன்சிங் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்து அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முன்வரவேண்டும்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராமஜென்மபூமி உருவாவதில் உறுதியாக இருப்போம். ராமர்பாலத்தை பாதுகாப்பதோடு, சேது சமுத்திர திட்டத்தையும் மறு ஆய்வு செய்வோம்.
சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதல், துப்பாக்கி சூடு சம்பவத்தில் ராமேஸ்வரத்தில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை மத்திய, மாநில அரசும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
இதில் உண்மை நிலையினை முறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கச்சத்தீவை பொதுவானதாக கருதி மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று இல.கணேசன் கூறினார்.