காடுவெட்டி குரு ‌பிணை ‌விடுதலை மனு தள்ளுபடி!

வியாழன், 10 ஜூலை 2008 (10:08 IST)
பிணை‌யி‌ல் ‌விடுதலை செ‌ய்ய‌க் கோ‌ரி காடுவெ‌ட்டி குரு தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை அ‌ரியலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்தது.

அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் குணசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அதோடு தத்தனூர் கிராமத்தை சேர்ந்த செல்விசெல்வம் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாக ஒரு வழக்கும், அரியலூரில் நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் ஆண்டிமடம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக ஒரு வழக்கையும் குரு மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு பதிவு செய்தனர்.

இந்த இரண்டு வழக்குக‌ளி‌‌ல் காடுவெ‌ட்டி குரு‌விட‌ம் ‌விசாரணை நட‌த்த ‌அ‌‌ரியலூ‌ர் நீ‌திம‌ன்ற‌‌ம் இர‌ண்டு நா‌ள் அனும‌தி வழ‌ங்‌கியது. இதை‌த் தொட‌ர்‌ந்த அவ‌ரிட‌ம் காவ‌‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌தி 2 நா‌ள் ‌விசாரணை‌க்கு ‌பி‌ன் அரியலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் நே‌ற்று மாலை 5 மணிக்கு குருவை ஆஜர்படுத்தினர்.

அ‌ப்போது குருவை ‌‌பிணை‌யி‌ல் ‌விடுதலை செய்யக்கோரி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாஜிஸ்திரேட்டு விஜயராணி விசாரித்தார்.

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கில் ‌பிணை ‌விடுதலை வழங்க மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு அதிகாரம் இல்லை என்று கூறி ‌பிணை ‌விடுதலை மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார்.

இதனைத்தொடர்ந்து பலத்த ாதுகாப்புடன் காடுவெ‌ட்டி குருவை காவ‌ல்துறை‌யின‌ர் திருச்சி மத்திய சிறையில் அடை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்