வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட துணை பொதுச் செயலாளர் செந்தில்வேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் பேருந்து நிலையம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூரில் திருவள்ளூர் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் அமர்நாத் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூரில் பா.ம.க. மாநில துணை செயலாளர் ரவிராஜ் தலைமையில் மறியல் செய்த பா.ம.க.வினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.