ராமே‌ஸ்வர‌‌த்‌தி‌ல் காலவரைய‌ற்ற வேலை‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!

சனி, 5 ஜூலை 2008 (13:50 IST)
த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌‌மீது தொட‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றி‌‌ல‌ங்கா கட‌ற்படையை க‌ண்டி‌‌த்து ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் இ‌ன்று முத‌ல் காலவரைய‌ற்ற வேலை‌‌நிறு‌த்த போ‌ரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த போரா‌ட்ட‌ம் காரணமாக ராமே‌ஸ்வர‌‌ம் கட‌ற்கரை‌ பகு‌தி‌‌யி‌ல் 3,000 நா‌ட்டு படகுகளு‌ம், 1,000 எ‌ந்‌திர படகுகளு‌ம் ‌நிறு‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ளன. ம‌னித நேய‌ம் இ‌ல்லாம‌ல் நட‌ந்து கொ‌ள்ளு‌ம் ‌சி‌றி‌ங்கா கட‌‌ற்படையை க‌ண்டி‌க்கு‌ம் வரை எ‌ங்க‌ள் போரா‌ட்ட‌ம் தொடரு‌ம் எ‌ன்று த‌மி‌‌ழ்நாடு புது‌ச்சே‌ரி ‌மீனவ‌ர் ச‌ங்க‌ பொது‌ச் செயலாள‌ர் எ‌ன்.ஜே.போ‌ஸ் கூ‌றினா‌ர்.

மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்தை தொட‌‌ர்‌ந்து பத‌ற்றமான பகு‌தி‌‌க‌ளி‌ல் காவ‌ல்துறை‌யின‌‌ர் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வரு‌ம் 10ஆ‌ம் தேதி பாம்பன் சாலை பாலத்தில் ‌மீனவ‌ர்க‌ள் மறியல் போராட்டம் நடத்த உ‌ள்ளன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்