ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு சிறப்புத்தேர்வு முடிவு!
வெள்ளி, 4 ஜூலை 2008 (12:04 IST)
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி கூறினார்.
மார்ச் மாதம் நடைபெறும் 10ஆம் வகுப்புத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வி அடைபவர்களுக்கு சிறப்பு உடனடித் துணைத் தேர்வுகள் நடைபெறும்.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு இத் தேர்வுகள் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஜூலை 2ஆம் தேதி தொடங்கியது. 10ஆம் வகுப்பு தேர்வுகள் நேற்று தொடங்கின.
இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.