இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல்நாடுகளை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்க கூடாது என அண்மையில் முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து க்யூ பிரிவு காவல்துறையினர் ஈழத் தமிழர்களை அகதிகள் முகாமில் விசாரித்து வருவதாக தெரிகிறது.
இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஈழத் தமிழர்கள் ஆளாக்கப்படுகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மண்ணில் வசித்து வரும் ஈழத்து மக்கள் அயல் நாட்டவராக நடத்துவது மனித நேயமற்ற செயலாக கருத வேண்டியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இங்கு குடியிருப்பவர்களுக்கு குடிரியுமை வழங்க வேண்டும் என சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாளை (3ஆம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.