தமிழக முகச்சீரமைப்பு நிபுணருக்கு டாக்டர் பி.சி. ராய் விருது!

செவ்வாய், 1 ஜூலை 2008 (19:47 IST)
சிறந்த மருத்துவ சமூக சேவையாற்றியமைக்காக 2005-ம் ஆண்டுக்கான இந்திய மருத்துகவுன்சிலின் புகழ்பெற்ற பி.சி. ராய் விருது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பல் மற்றும் முகச்சீரமைப்பநிபுணர் பேராசிரியர் டாக்டர் எஸ்.எம். பாலாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் பி.சி. ராய் விருதமருத்துவ உலகின் மிக உயர்ந்த விருதான டாக்டர் பி.சி. ராய் விருது ஆண்டுதோறுமமருத்துவத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும், சிறந்த மருத்துவ சமூக சேவை புரிபவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

பேராசிரியர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி சென்னை தேனாம்பேட்டையில் பல் மற்றும் முகச்சீரமைப்பு மையத்தை நிறுவி சர்வதேதரத்தில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சைகளையும், நவீன பற்சிகிச்சைகளையும் செய்து வருவதோடு, சேஷல்ஸ், மொரீஷியஸ், மாலத்தீவு போன்ற நாடுகளின் கவுரவ மருத்துவ ஆலோசகராகவுமபணியாற்றி வருகிறார்.

முகச்சீரமைப்பு துறையில் டிஸ்டிராக்ஷன், பி.எம்.பி, உதடஅண்ணப்பிளவு, காஸ்மெடிகமுக அழகு சிகிச்சைகளில் முன்னோடியாக விளங்கும் இவர் வெளிநாடுகளில் நடைபெறும் மருத்துகருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை முறைகள்
குறித்து தான் கண்டுபிடித்த எளிய வழிமுறைகளை சான்றுகளுடன் சமர்ப்பித்ததற்காக பல விருதுகளமற்றும் பரிசுகள் பெற்றுள்ளார். முகச்சீரமைப்புத் துறையில் முதன் முறையாக PhD பட்டம் பெற்ற மருத்துவர் இவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இவர் பல் மற்றும் முகச்சீரமைப்புத் துறையில், சர்வதேச அளவில் ஆற்றியுள்ள சேவையபாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகதமிழகத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி 01-07-2008 அன்று ஜனாதிபதி மாளிகையில், நடைபெற்றது. இவ்விருதினை இந்திய குடியரசுததலைவரபிரதீபா பாட்டில் வழங்கினார். இவ்விருதிற்காக பேராசிரியர் டாக்டர் எஸ்.எம். பாலாஜி அவர்கள் 2005-ம் ஆண்டு தேர்வசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்