ஈரோடு: நூல் விலையேற்றத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ஜவுளி ஆலைகளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றன.
"மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். கழிவு பஞ்சு ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பஞ்சு மற்றும் கோன்நூல்களுக்கு விதித்துள்ள 4 சதவீத விற்பனை வரியை ரத்து செய்ய வேண்டும். சாயக்கழிவு பிரச்சனைகள் குறித்து அரசு திட்டங்களை வகுத்து மூடப்பட்டுள்ள சாயப்பட்டறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடக்கவிருப்பதாக ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது..
இதில் நூற்பாலைகள், சைசிங், வார்ப்பிங், விசைத்தறி, கைத்தறி, பின்னலாடை, மற்றும் பிராசசிங் உள்ளிட்ட ஜவுளித்துறை சார்ந்த ஆலைகளும் கலந்து கொள்கின்றன. நாளை ஈரோட்டில் மிகப்பெரிய பேரணியும் நடக்கிறது.