ஜூலை 2ஆ‌ம் தே‌தி தனியார் வேன்களு‌ம் வேலை ‌நிறு‌த்த‌ம்!

திங்கள், 30 ஜூன் 2008 (17:23 IST)
ஜூலை 2ஆ‌ம் தேதி நட‌க்கு‌ம் லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த போரா‌‌ட்ட‌‌த்து‌க்கு ஆதரவு தெ‌ரிவ‌ி‌த்து தனியார் வேன்களும் ஓடாது என்று வேன் உரிமையாளர்கள் ச‌ங்க‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேன், மேக்சி கேப், மினி வேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கமலக்கண்ணன் (எ) துரை செ‌ய்‌‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ஜூலை 2ஆ‌ம் தேதி நடைபெறும் லாரிக‌ள் வேலை ‌நிறு‌த்த போராட்டத்தில் எங்களது சங்கமும் பங்கேற்கிறது. மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரம் வேன்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இவை அனைத்தும் 2ஆ‌ம் தேதி ஓடாது.

பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் வேன்கள் சென்னையில் 3,000 உள்ளது. இவைகளும் 2ஆ‌ம் தேதி ஓடாது. இதே போல் அலுவலகங்களுக்கு ஐ.டி. பார்க் போன்றவைகளுக்கு ஊழியர்களை அழைத்து செல்லும் வேன்களும் 2ஆ‌ம் தேதி ஓடாது. எல்லா வேன்களும் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்படுகின்றன.

சாதா டீசலை பிரீமியம் டீசல் என்று ஏமாற்றி கூடுதல் விலைக்கு விற்று மக்களை ஏமாற்றுகிறார்கள். சென்னையில் எங்குமே சாதா டீசல் கிடைப்பதில்லை. இதை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக அனைத்து வேன்களும் நிறுத்தப்படுகின்றன எ‌ன்று கமல‌க்க‌ண்ண‌ன் கூ‌றினா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த போராட்டத்திற்கு மணல்- டிப்பர் லாரி சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்‌சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மணல் லாரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில், "லாரிக‌ள் வேலை ‌நிறு‌த்த போராட்டத்தில் எங்களது சங்கமும் பங்கேற்கிறது'' என்று கூ‌றியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்