நாமக்கல் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியை மக்களின் வெளிப்பாடு சுனாமிபோல் தாக்கும். காங்கிரஸ் ஆதரவில் உள்ள தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை மக்கள் தூக்கி எறிவார்கள். இதை உணர்ந்துதான் கம்யூனிஸ்டு கட்சிகள் இப்போது மத்திய அரசை எதிர்த்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறது.
லாரி உரிமையாளர்கள் நாளை நள்ளிரவு முதல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் அத்வானியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விலை வாசியை கட்டுப்படுத்துவோம். தற்போது நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது என்றார் இல.கணேசன்.