அரசு இடஒது‌க்‌கீடு ‌பிர‌ச்சனை: ராமதாசு‌க்கு பொன்முடி பதில்!

சனி, 28 ஜூன் 2008 (16:58 IST)
113 சுய‌நி‌தி பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் 65 விழுக்காட்டு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு தர முடியாது என்று மறுக்க வில்லை. அவர்கள் அனைவரும் ஒ‌ப்புத‌லகடித‌மகொடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று ராமதா‌ஸ் புகாரு‌க்கு உய‌ர் க‌ல்வ‌ி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அரசு ஒது‌க்‌கீ‌ட்டு‌க்கு 278 பொறியியல் கல்லூரிகளில் 165 கல்லூரிகள் மட்டும் ஒப்புதல் அ‌ளி‌த்து‌ள்ளதாகவு‌ம், 113 கல்லூரிகள் ஒ‌ப்புதலு‌க்கு உடன்படவில்லையா எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

அந்த 113 கல்லூரிகள் 65 விழுக்காட்டு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு தர முடியாது என்று மறுக்க வில்லை. அவர்கள் அனைவரும் ஒ‌ப்புத‌ல் கடித‌ம் கொடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஏதாவது குற்றச்சாட்டை என் மீது சுமத்த வேண்டுமென்பது தானே தவிர வேறல்ல எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

மாணவர்கள் கல்லூரிகளில் நேரடியாகப் பணம் கட்டினால், அதிகத் தொகையைக் கட்டுமாறு வலியுறுத்தக் கூடும் என்று முதலமைச்சர் தெரிவித்த அச்சம் உண்மையாகி விடாதா? எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளத‌ற்கு, மாணவர்கள் வங்கியிலே தான் கட்ட வேண்டுமென்று விரும்பினால், அவரவர்கள் தங்கள் தங்கள் ஊர்களில் உள்ள வங்கிகளிலே அந்தப் பணத்தைச் செலுத்தலா‌ம். தற்போது இப்படி மூன்று வகையான வசதிகள் உள்ளன. எனவே ஏதாவது குறையைச் சொல்லி ராமதாஸ் குற்றச்சாட்டு சுமத்த எண்ணினால் அது சரியாக இருக்காது எ‌ன்று பொ‌ன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வழக்கு நிலுவையில் உள்ளது என்ற விவரம் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழுவுக்குக் கூடத் தெரியாமல் போனது எப்படி? எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளது ப‌ற்‌றி, வழக்கு நிலுவையில் உள்ள விவரம் நீதிபதி பாலசுப்பிரமணிய‌த்து‌க்கு‌ம் தெரியும், அரசுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். முதலமைச்சருக்கும் தெரியும் எ‌ன்று பொ‌ன்முடி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

ராமதாஸ் தெரிவித்துள்ள ஐயங்களுக்கு நாம் வரிக்கு வரி விளக்கம் அளித்துள்ளோம். எனவே எந்தத் தவறும் அரசு சார்பிலோ, என் சார்பிலோ நடைபெறவில்லை. அவரது குற்றச் சாட்டு "ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்'' என்பதைப் போல என் மீது குற்றச்சாட்டு எதையாவது கூற வேண்டு மென்ற அடிப்படையிலே சுமத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்