பா.ம.க. ஊசலாடு‌கிறது: இல.கணேசன்!

வியாழன், 26 ஜூன் 2008 (17:35 IST)
''சர்க்கஸ் கூடாரத்தில் பார் விளையாடுபவரைப் போல ஒரு கை விட்டாலும் மற்றொரு கையில் தொங்கியவாறு சாகசம் செய்வது போல பா.ம.க ஊசலாடுகிறது'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், ி.ு.க தீண்டத்தகாத கட்சி இல்லை. ஆனால் கூட்டணி என்று வரும்போது பா.ஜ.க அணியில் தி.ு.க இடம் பெறும் சாத்தியக் கூறு ஏதும் இல்லை. நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பா.ஜ.க.வுடன் அ.இ.அ.‌ி.ு.க. ஒரு‌மி‌த்கரு‌த்துட‌னஇணைந்து செயல்பட்டுள்ளது. எனவே பா.ஜ.க, அ.இ.அ.ி.ு.க. வுக்கும் உறவஉள்ளது என்று மக்களும் நம்பத் தொடங்கி விட்டனர்.

தமிழகத்தில் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் பா.ஜ.க போட்டியிடும். நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அலை வீசுகிறது. காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதற்குக் காரணம் பா.ஜ.க.தான்.

அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானால், தன்னிச்சையாக நாடு அணு சோதனைகளை நடத்த இயலாது. அடிமை சாசனம் போன்ற இந்த ஒப்பந்தத்தை பா.ஜ.க ஏற்காது.

ி.ு.க அணியில் இருந்து பா.ம.க வெளியேற்றப்பட்டுள்ளது மிகவும் "த்ரில்' தரும் விஷயமாகும். சர்க்கஸ் கூடாரத்தில் "பார்' விளையாடுபவரைப் போல ஒரு "கை' விட்டாலும் மற்றொரு "கையில்' தொங்கியவாறு சாகசம் செய்வது போல பாமக ஊசலாடுகிறது.

கச்சத் தீவை இரு நாடுகளுக்கும் பொதுவான மீன்பிடி தளமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை தொல்லியல் சின்னமாக அறிவிக்க ஆய்வு நடத்தவும், தோரியம் உள்ளிட்ட கனிம வளத்தை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவும், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் சேது திட்டத்தை நிறைவேற்றவும் பா.ஜ.க. பாடுபடும் என்றஇல.கணேசன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்