மீனவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்: தா.பாண்டியன்!

வியாழன், 26 ஜூன் 2008 (16:40 IST)
''சி‌றில‌ங்கா கடற்படையின் அத்துமீறல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக மீனவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாள‌ர் தா.பாண்டியன் கூ‌றினா‌ர்.

நாகை மாவட்டம் பழையாற்றில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை விழிப்புணர்வு இயக்கம் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசுகை‌யி‌ல், ‌சி‌றில‌‌ங்கா கடற்படையின் அத்துமீறல்கள் சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ‌சி‌றில‌ங்கா கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்பாக கடிதம் எழுதுவது, கெஞ்சுவது போன்ற அவலம் இனியும் தொடரக்கூடாது.

சி‌றில‌ங்ககடற்படையின் அத்துமீறல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக மீனவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இந்திய மீனவர்களைத் தாக்கினால் திருப்பி அடிப்போம் என மத்திய அரசு, ‌சி‌றில‌ங்கா கடற்படையைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

மீனவர்களின் வாழ்வுரிமைக்கான கோரிக்கைளை வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதில் முத‌ல்வ‌ர் உறுதியாக இருக்க வேண்டும்.

சி‌றில‌ங்கா கடற்படையால் சுடப்பட்டுச் சாவதைவிட, போராடி சாவதே மேல் என்ற நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மீனவர்களின் உரிமையை நிலை நிறுத்துவதற்காக தா‌‌ன் புனிதப் போர்ப் பயணம் எ‌ன்று கூ‌றினா‌ர் தா. பாண்டியன்.

வெப்துனியாவைப் படிக்கவும்