இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை நகரில் சுமார் 250 பெரிய பூங்காக்கள், 160 சாலை தீவுப்பூங்காக்கள், 400 சாலை ஓரப்பூங்காக்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சி ஏற்கனவே உள்ள பூங்காக்களை மேம்படுத் தும் பணிகள், புதிதாக பூங்காக் களை உருவாக்கும் பணியும் மேற்கொண்டு வருகிறது.
2007-2008ம் ஆண்டில் சுமார் 100 பூங்காக்கள், 300 சாலை ஓரப்பூங்கா மற்றும் சாலை தீவுத்திடல் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக ஏற்படுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்டுள்ள நெசப்பாக்கம் பூங்கா, டர்ன்புல்ஸ் சாலைப்பூங்கா, மக்கள் பூங்கா, மேயர் சுந்தர் ராவ் பூங்கா, ஹாடோஸ் சாலைப்பூங்கா, வள்ளுவர் கோட்டம் எதிரில் பூங்கா போன்ற பல்வேறு பூங்காக்கள் சமீபத்தில் மாநகராட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2008-2009ம் ஆண்டில் எழில் கொஞ்சும் வண்ண மலர்ச்செடிகள், பசுமையான புல்வெளிகள், அழகிய நீருற்றுகள், நடைபாதை மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடல்கள் போன்ற புதிய அம்சங்களுடன் நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, ஜெய்நகர் பூங்கா, டவர் பூங்கா ஆகியவை வடிவமைக்கப்படுகிறது.
TN.Gov.
TNG
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற பனகல் பூங்கா புதுப்பொலிவுடன் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட உள்ளது. இப்பூங்காவில் 3 இடங்களில் அழகிய நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளன.
அழகிய நீரூற்றுகள், சிறு சிறு குளங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், அழகிய நடைபாதைகள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. கண்ணைக் கவரும் வகையில் புல்வெளிகள், அழகிய பூச்செடிகள் அமைக்கப்பட உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இப் பூங்கா சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மேம்பாட்டுப் பணிகள் இந்த ஆண்டுக் குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.