விலைவாசி உயர்வைக் கண்டித்து ஜூன் 30ஆம் தேதி விழுப்புரத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகின்ற ஏழை, எளிய மக்களுக்கு குடும்ப நிதி உதவி கோரியும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜூன் 30ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறவுள்ளது.
விழுப்புரத்தில் ரயில் நிலையம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையேற்கின்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ராமுவசந்தன் கூறியுள்ளார்.