பெர‌ம்பலூ‌ரி‌ல் பு‌திய ச‌ர்‌க்கரை ஆலை!

திங்கள், 23 ஜூன் 2008 (11:58 IST)
தனல‌ட்சு‌மி ‌‌‌சீ‌னிவாச‌ன் க‌ல்‌வி ‌நிறுவன குழும‌ம் சா‌ர்‌பி‌ல் பெர‌ம்பலூ‌‌‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் பு‌திய ச‌ர்‌க்கரை ஆலை அடு‌த்த ஆ‌ண்டு நவ‌ம்ப‌ரி‌ல் தொட‌‌ங்க‌ப்படு‌கிறது.

இது கு‌றி‌த்து தனல‌ட்சு‌மி ‌‌சீ‌னிவாச‌ன் ச‌ர்‌க்கரை ஆலை‌யி‌ன் தலைவரு‌ம் ‌நி‌ர்வாக இய‌க்குனருமான ‌சீ‌னிவாச‌ன் கூறுகை‌யி‌ல், பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌ம் வே‌ப்ப‌ந்த‌ட்டி தாலுகா‌வி‌ல் உ‌ள்ள உடு‌ம்‌பிய‌ம் எ‌ன்ற இட‌‌த்‌தி‌ல் பு‌திய ச‌ர்‌க்கரை ஆலை அமை‌க்க‌ப்ப‌டு‌கிறது. 150 ஏ‌க்க‌ரி‌ல் அமை‌க்க‌ப்படு‌ம் இ‌ந்த ச‌ர்‌க்கரை ஆலை, ஒரு நாளை‌க்கு 3,500 ட‌ன் ‌பி‌‌‌ளி ‌திற‌ன் கொ‌ண்டவையாக இரு‌க்கு‌ம்.

இ‌ந்த ச‌ர்‌க்கரை ஆலை‌யி‌ல் 23 மெகாவா‌ட் ‌‌‌மி‌ன்சா‌ர‌ம் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌‌க்கூடிய ‌மி‌ன் உ‌ற்ப‌‌த்‌தி அமை‌க்க‌ப்படு‌ம். இ‌ந்த ச‌ர்‌க்கரை ஆலை‌யி‌ல் 750 பேரு‌க்கு நே‌ரிடையாகவோ, 3,000 பேரு‌க்கு மறைமுகமாகவோ வேலை வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம்.

இ‌ந்த ச‌ர்‌க்கரை ஆலை‌யி‌னா‌ல் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் அ‌திக அளவு கரு‌ம்பு உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌ம். இதனா‌ல் ‌விவசா‌யிக‌ள் அ‌திக பய‌ன் அடைவா‌ர்க‌ள் எ‌ன்றா‌ர் ‌சீ‌னிவாச‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்