‌ஆ‌தி‌திரா‌விட‌ர் ப‌ள்‌ளி‌யி‌ல் 10‌ஆ‌ம் வகு‌ப்பு, ‌பிள‌ஸ் 2 தே‌‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் அ‌திக‌ரி‌ப்பு: த‌மிழக அரசு!

வெள்ளி, 20 ஜூன் 2008 (13:21 IST)
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆமவகுப்புகளில் தேர்ச்சி விகிதம் அதிக‌ரி‌த்து‌ள்ளது எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மார்ச் 2008 ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மொத்தம் 6974 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியதில் 4904 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 70 ‌விழு‌க்காடு தேர்ச்சி விகிதம் ஆகும். மார்ச் 2006-ல் 54 வ‌ிழு‌க்காடு ஆக இருந்த தேர்ச்சி 2007 மார்ச் பொதுத்தேர்வில் 65 ‌விழு‌க்காடாக அதிகரித்து தற்போது மார்ச் 2008-ல் 70 ‌விழு‌க்காடாக உயர்ந்துள்ளது.

ஆதிதிராவிடர் நலத் துறையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியில், இந்த வருடம் தான் 4 மேல்நிலைப்பள்ளிகள் 100 ‌விழு‌க்காடு தேர்ச்சி விழுக்காட்டினை காட்டியுள்ளன. கடந்த மார்ச் 2007-ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 35 மாணவர்கள் 1000 க்கு மேல் மதிப்பெண்களை பெற்றிருந்தனர். தற்போது மார்ச் 2008 அரசு பொதுத்தேர்வில் 81 மாணவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

10ஆ‌ம் வகு‌ப்பு மார்ச் 2008 அரசு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 13,425 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 10451 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 78 ‌விழு‌க்காடு தேர்ச்சி விகிதமாகும். மார்ச் 2006ல் 70 ‌விழு‌க்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், மார்ச் 2007 ல் 77 ‌விழு‌க்காடாக அதிகரித்து, தற்போது மார்ச் 2008 ல் 78 ‌விழு‌க்காடாக உயர்ந்துள்ளது.

மார்ச் 2007 அரசு பொதுத்தேர்வில் 13 பள்ளிகள் 100 ‌விழு‌க்காடு தேர்ச்சியை பெற்றிருந்தன. தற்போது மார்ச் 2008 அரசு பொதுத்தேர்வில் 22 பள்ளிகள் 100 ‌விழு‌க்காடு தேர்ச்சி விழுக்காட்டினை காட்டியுள்ளன. மேலும், 919 மாணவ, மாணவியர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர் எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்