பா.ம.க நீடிக்குமா? சோனியாதான் முடிவு செய்வார்: சுதர்சனம்!

வெள்ளி, 20 ஜூன் 2008 (11:11 IST)
''மத்திய கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா என்பதை சோனியாகாந்திதான் முடிவு செய்வார்'' என்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் டி.சுதர்சனம் கூறினார்.

செ‌ன்னை‌‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌‌‌‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தி.மு.க. கூட்டணியை விட்டு பா.ம.க.வை வெளியேற்றியது சிறு கீறல். மதவாத சக்திகளுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் சோனியாவுக்கு கிடைக்கும். பா.ம.க. வெளியேறியதால் பாதிப்பா இல்லையா என்பது பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கருத்துதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தும். மத்திய கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? என்பது பற்றி சோனியா காந்திதான் முடிவு செய்வார்.

பா.ம.க.வை கூட்டணியை விட்டு வெளியேற்றியது துரதிருஷ்டவசமான செயல். பா.ம.க. நாளை மீண்டும் இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

தமிழ்நாட்டை பொருத்தவரை தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. முதலமைச்சர் கருணாநிதியை, வயது முதிர்ந்த தலைவரை, 5 முறை முதலமைச்சரை ஒருமையில் பேசியதும், தரக்குறைவாக பேசியதும் உண்மையாக இருக்குமானால், அதை வன்மையாக கண்டிக்கிறோம் எ‌ன்று சுத‌ர்சன‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்