த‌மிழக‌த்‌தி‌ல் 3வது அ‌‌ணி அமைவது உறு‌தி: சர‌த்குமா‌ர்!

வியாழன், 19 ஜூன் 2008 (13:15 IST)
''தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைமையில் மூன்றாவது அணி அமைவது உறு‌தி'' என்று அ‌க்க‌ட்‌சி தலைவ‌ர் சரத்குமார் கூறினார்.

புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தி.மு.க.வுடனோ, அ.இ.அ.தி.மு.க.வுடனோ கூட்டணிக்கு வாய்ப்பில்லை. இவை தவிர்த்த ஒருமித்த கருத்துள்ள பிற அரசியல் கட்சிகள் இணையும் நிலையில், எங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைவது உறுதி.

தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.க நீக்கப்பட்டிருக்கிறது. கட்சிகள் கூட்டணி அமைத்து ஓட்டு வாங்கி விட்டு, ஆட்சியைப் பிடித்ததும் கூட்டணியை விலக்கிக் கொள்வது மக்களை ஏமாற்றுகிற செயல்.

புது‌க்கோ‌‌ட்டை நாடாளும‌ன்ற தொகு‌தியை ‌மீ‌ண்டு‌ம் அமை‌க்க வே‌ண்டு‌ம் என சரத்குமார் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்