பய‌ன் அடை‌ந்து ‌வி‌ட்டு எ‌ள்ள‌ி நகையாடுவதா? ராமதாசுக்கு ‌வீரமணி கண்டனம்!

புதன், 18 ஜூன் 2008 (16:50 IST)
திரா‌விட இய‌க்க தோ‌ள்க‌ளி‌ன் ‌மீ‌றி ஏ‌றி ‌நி‌ன்று பய‌ன் அடை‌ந்து ‌வி‌ட்டு ‌திரா‌விட இய‌க்க‌ங்களையே இ‌ன்று பா.ம.க. தலைமை எ‌ள்‌ளி நகையாடுவதை ‌திரா‌விட இய‌க்க‌ங்க‌ள் ம‌ன‌‌தி‌ல் ப‌திய வை‌‌த்து கொ‌ள்ளாம‌ல் இரு‌க்க முடியுமா? எ‌ன்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், தி.மு.க. தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வின் முக்கிய பொறுப்பாளர் ஒருவரின் தரக்குறைவான கொலை வெறிப் பேச்சு, அரசியல் பொது வாழ்க்கையில் நாகரிகத்தினை குழி தோண்டிப் புதைத்து விட்ட ஓர் இழி சொற்களின் தொகுப்பாக அமைந்துள்ளதைப் படிக்கும் எவரும் வெட்கத்தால் தலை குனிந்து வேதனையால் வாடுவர். அறிக்கையில் உள்ள ஒரு வாக்கியம் மிகவும் தெளிவான விளக்கத்தை அளிக்கிறது.

இதற்கு பிறகு இது குறித்து விளக்கம் அளித்த அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் இதைப் பேசி சில மாதங்கள் ஆகின்றன என்று சொன்னாரே தவிர அப்படிப் பேசப்படவில்லை என்று மறுக்கவில்லை, பேசியது தவறு என்று அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் முன்வரவில்லை. பேசியவர் மீது அவர்கள் கட்சியின் சார்பாக நடவடிக்கை எடுக்கவும் இல்லை என்பதே அவ்வாக்கியம் ஆகும்.

பொதுவாக இத்தனை மாதங்கள் கழித்தா என்று கேட்பதற்குப் பதிலாக இத்தனை மாதங்களில் ஏற்கனவே இப் பிரச்சினை அத் தலைமையின் கவனத்திற்கு சுட்டிக்காட்டிய பிறகும் கூட ஒரு மரியாதை நியமித்தமாகக் கூட ஒரு வருத்தமோ, கண்டனமோ அல்லது குறைந்த பட்ச நடவடிக்கையோ கூட பேசியவர்கள் மீது தலைமையால் எடுக்கப்படவில்லை என்பது நியாயம் தானா?

திராவிட இயக்க தோள்களின் மீதி ஏறி நின்று பயன் அடைந்து விட்டு திராவிட இயக்கங்களையே இன்று பா.ம.க. தலைமை எள்ளி நகையாடுவதை திராவிட இயக்கங்கள் மனதில் பதிய வைத்து கொள்ளாமல் இருக்க முடியுமா? மக்களுக்கு வசதி நாட்டு வளர்ச்சியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட முற்போக்கு திட்டங்களுக்குத் தோழமை என்ற சாக்கில் போடப்பட்ட முட்டுக்கட்டை இதன் மூலம் அகன்று விட்டது குறித்து பொது நலனில் அக்கறையும் உள்ளவர்கள் நிம்மதி கொள்வர். இதை கண்டிக்காமல் அரசியல் கூட்டணியில் இருந்து வெளியேற்ற அரசியல் சதித்திட்டம் என்று முன்நாளே அறிக்கை விட்ட பிறகும் யார் தான் பொறுமை காப்பார்கள் எ‌ன்று ‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்