ஈரோட்டில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பத்து மாவட்டங்களை சேர்ந்த மூன்றாயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானம் விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் தொடங்கியது. இதில் ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, சேலம் ஆகிய பத்து மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மூன்றாயிரம் பேர் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு கோவைமண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அதிகாரி ராஜேஷ்தாகூர் தலைமையில் ராணுவ சிப்பாய்கள், தொழில்நுட்ப சிப்பாய்கள், செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான நேர்முக தேர்வு நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்களின் தகுதி சான்றிதழ் சரி, பார்க்கப்பட்டன. இம்மாதம் 23ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.