சென்னையில் இன்று ம.தி.மு.க மண்டல மாநாடு!

புதன், 18 ஜூன் 2008 (12:17 IST)
செ‌‌ன்னை ‌தீவு‌த்‌திட‌லி‌ல் ம.ி.ு.க மண்டல மாநாடு இ‌ன்று மாலை நடைபெறுகிறது.

செ‌ன்னை ‌தீவு‌த்‌திட‌‌லி‌ல் மாலை 4 மணிக்குத் தொடங்கும் மாநாட்டுக்கு நாசரேத் துரை தலைமை வகிக்கிறார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொடங்கி வைக்கிறார். வேளச்சேரி பி. மணிமாறன் வரவேற்பு உரையாற்றுகிறார்.

கட்சிக் கொடியை ஜீவன் ஏற்றுகிறார். பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் படங்களை பாலவாக்கம் க. சோமு திறந்து வைக்கிறார்.

அ.இ.அ.ி.ு.க சார்பில் முன்னாள் அமைச்சர் மு. தம்பிதுரை பங்கேற்கிறார். மு. கண்ணப்பன், மல்லை சி.இ. சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். நிறைவாக வைகோ மாநாட்டு உரை நிகழ்த்துகிறார்.

முன்னதாக மாநாட்டு பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் முன்பிருந்து மாலை 3 மணிக்குப் புறப்படுகிறது. அண்ணா சிலை, பெரியார் சிலை வழியாக வரும் இந்த அணி வகுப்பு ஊர்வலத்தை மன்றோ சிலை அருகே அமைக்கப்படும் பிரத்யேக மேடையில் இருந்தவாறு வைகோ பார்வையிடுகிறார். இதன்பின் இந்த ஊர்வலம் மாநாட்டுத் திடலுடன் நிறைவடைகிறது.

மாநாட்டையொட்டி மன்றோ சிலை, கடற்கரைச் சாலை, போர் நினைவுச் சின்னம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்