பிளஸ் 2 துணைத்தேர்வு: நாளை ஹால் டிக்கெட்!

புதன், 18 ஜூன் 2008 (11:02 IST)
பிளஸ்2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு, நாளை முதல் வரு‌ம் 21ஆம் தேதி வரை ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது எ‌ன்று தே‌ர்வுக‌ள்துறை இய‌க்குன‌ர் வச‌ந்‌தி ‌ஜீவான‌ந்த‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் மார்ச் 2008-ல் பள்ளி மாணவராக தேர்வு எழுதி, 1 முதல் 3 பாடங்களில் தோல்வியடைந்து இத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

மார்ச் 2008 அல்லது அதற்கு முந்தைய பருவங்களில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூட விநியோக மையத்தில் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் அண்ணா சாலை, மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

செய்முறை மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை செய்யவேண்டிய தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகலாம் என்று வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்