த‌‌மிழக‌த்த‌ி‌‌ல் சமைய‌ல் எ‌ரிவாயு ரூ.30 குறைப்பு: கருணாநிதி!

திங்கள், 16 ஜூன் 2008 (11:38 IST)
''ஒரு சமைய‌லஎ‌ரிவாயஇணைப்பு மட்டுமே வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 30 ரூபாயதமிழக அரசே ஏற்கும்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

கடலூரில் 2 நாள்கள் நடைபெற்ற தி.மு.க. மகளிரணி மாநில மாநாட்டை நிறைவு செய்து ‌தி.ு.க. தலைவரு‌ம், முதலமை‌ச்சருமாகருணாநிதி பேசுகை‌யி‌ல், இந்த மாநாட்டு நிறைவு விழாவுக்கு வருவதற்கு முன்பு நிதித்துறைச் செயலரிடம் பேசினேன். நமது மகளிரணியினர் சமையல் எ‌ரிவாயவிலையைக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்தும், விலை குறைப்பது குறித்தும் விவாதித்தோம்.

அண்மையில் மத்திய அரசு, மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சமையல் எ‌ரிவாயவிலையை உருளைக்கு ரூ.50 உயர்த்தியுள்ளது. தற்போது ஒரஎ‌ரிவாயஇணைப்பு மட்டும் பெற்றுள்ள 50 லட்சம் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பயனடையும் வகையில் எ‌ரிவாயஒன்றுக்கு ரூ.30 அரசே ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் இந்த ஏழை, நடுத்தர குடும்பங்கள் தற்போது 20 ரூபாயமட்டும் கூடுதலாகச் செலுத்தி சமைய‌லஎ‌ரிவாயபெற்றுக்கொள்ளலாம்.

மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்தத் தொகையை அரசே நேரடியாக வழங்கும். நம்முடைய மகளிரணியினரால் இப்படிப்பட்ட மகத்தான மாநாட்டை நடத்திக் காட்ட முடியுமா என்று நான் நினைத்தேன். இந்த விஷயத்தில் நான் தோற்றுவிட்டேன் என்பதில் வெட்கப்படவில்லை; பெருமையடைகிறேன்.

தமிழன் தமிழினத்துக்காக தலைநிமிர தன்னுடைய பண்பாட்டை உயிர்ப்பிக்க வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் நமது பண்பாட்டைப் புதுப்பிக்கவும் உயிர்ப்பிக்கவும் சூளூரை மேற்கொள்வோம் என்றகருணாநிதி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்