க‌ட்‌சிக‌ள் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும் ‌: கிருஷ்ணசாமி!

ஞாயிறு, 15 ஜூன் 2008 (11:24 IST)
''தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும்'' என்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி தலைவ‌ர் எம்.கிருஷ்ணசாமி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், திருமண விழாவில் ஆற்காடு வீராசாமி, சி.டி. வெளியிட்டு பேசிய பேச்சுக்கு, முதலமைச்சர் கருணாநிதி எடுத்து வைத்த வாதம் ஏற்புடையது தான். கட்சியின் உயர் மட்ட குழுவை கூட்டி முடிவை அறிவிப்பதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

கட்சி பணியில் அக்கறை செலுத்தாத காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்குவதற்கு, பொறுப்பாளர்கள் அருண்குமார், வீரப்பமொய்லியிடம் பேசி இருக்கிறேன். விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

தொலைபேசி ஒட்டு கேட்பு என்பது மோசமான ஒன்று. இதில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் எ‌ன்று ‌கிரு‌‌ஷ்ணசா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்