ம‌னித நேய‌த்‌தி‌ல் ந‌ளி‌னி ‌விடுதலை: பழ.நெடுமாறன்!

சனி, 14 ஜூன் 2008 (11:45 IST)
''ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்றுள்ள அனைவரையும் மனித நேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்'' என்‌தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற‌னகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

தஞ்சாவூரிலஅவர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அளித்த பேட்டி‌யி‌ல், 2002-ல் அ.இ.அ.ி.ு.க ஆட்சியில் தமிழர் தேசிய இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை தி.ு.க ஆட்சியிலும் நீடிக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதிலும், அடக்கு முறைகளை ஏவி விடுவதிலும் அ.இ.அ.ி.ு.க, தி.ு.க கட்சிகள் இடையே எவ்வித வேறுபாடுகளும் இல்லை.

மக்கள் மத்தியில் இவ்விரு கட்சிகள் மீதுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதால், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற வேண்டுமானால் அ.இ.அ.ி.ு.க, தி.ு.க. அல்லாத 3வது அணித் தலைமையில் ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம்.

எங்கள் போராட்டத்தின் விளைவாக முதல்வர் கருணாநிதி அளித்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றித் தரப்படவில்லை. இலங்கை தமிழர்களுக்கு எங்களால் ரூ.1 கோடி மதிப்பில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் அனைத்தும் வீணாகிவிட்டன.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பல கைதிகளை அரசு விடுதலை செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்றுள்ள அனைவரையும் மனித நேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்‌று பழ.நெடுமாற‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்