நெ‌ய்வே‌லி‌யி‌ல் 2,500 தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது!

வெள்ளி, 13 ஜூன் 2008 (17:48 IST)
நெ‌ல்வே‌லி அன‌ல்‌மி‌ன் ‌நிலைய‌த்தை மு‌ற்றுகை‌‌யிட முய‌ன்ற 2,500 ஒ‌ப்ப‌ந்த தொ‌‌ழிலாள‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌‌ட்டன‌ர். இ‌தி‌ல் 800 பே‌ர் பெ‌ண்க‌ள் ஆவ‌ர்.

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், போனஸ் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 12 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாகத்துடன் அவர்கள் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்து விட்டன. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் 2,500 ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இன்று என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு மு‌ற்றுகை போராட்டத்தில் ஈடுப‌ட்டன‌ர். அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். இ‌தி‌ல் 800 பே‌ர்க‌ள் ஆவ‌ர்.

இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மு‌ன்பு ஒரு நாளை‌க்கு 2,490 மெகாவா‌ட் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இது த‌ற்போது 500 மெகாவா‌ட்டாக குறை‌ந்து‌ள்ளது.

இதேபோ‌ல் ‌நில‌க்க‌ரி உ‌ற்ப‌த்‌தி 35,000 இரு‌ந்து 5,000 ஆக குறை‌ந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்