‌தி.மு.க. மக‌ளி‌ர் மாநாடு: சோ‌னியா கா‌ந்‌தி வா‌ழ்‌‌த்து!

வெள்ளி, 13 ஜூன் 2008 (13:19 IST)
கடலூரில் நடைபெறும் தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாட்டு‌க்கு அ‌கில இ‌ந்‌திய கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி தலைவ‌ர் சோ‌னியாகா‌ந்‌தி வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

கடலூ‌ரி‌ல் நாளை, நாளை மறுநா‌ள் நடைபெற உ‌ள்ள ‌தி.மு.க. மக‌‌ளி‌ர் அ‌ணி மாநா‌ட்டு‌க்கு வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து சோ‌னியா‌கா‌ந்‌தி எழு‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், தி.மு.க.வின் மகளிர் அணி மாநில மாநாடு, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தி.மு.க. மற்றும் அதன் மகளிர் அணி ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க சாதனைகளை முன்னெடுத்து வைக்க வரவேற்கத்தக்க வாய்ப்பை வழங்குகிறது.

முதலமைச்சர் கருணாநிதியின் அறிவார்ந்த தலைமையின் கீழ் தி.மு.க. பெண்களுக்கு சமஉரிமை பெற்றுத்தர பாடுபட்டு வருகிறது. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 ‌‌விழு‌க்காடு இடஒதுக்கீடு வழங்கிய முதல் கட்சி அதுதான்.

மேலும், பெண்களின் சமூக பொருளாதார அதிகாரங்களை முன்னெடுத்து செல்வதற்காக ஏராளமான திட்டங்களை தி.மு.க. முன்னோடியாக செயல்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் நாட்டின் இதர பகுதிகளுக்கு உணர்வூட்டுவதாகவும், முன்மாதிரியாகவும் அமையும் என்று நம்புகிறேன்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மகளிர் உரிமைகளில் அவர்களுக்குள்ள உறுதியான கடப்பாட்டை பாராட்டுகிறேன். இந்த மாநாடு பெரும்பயனுள்ள விவாதத்தையும், நடவடிக்கையையும் அளிக்கும் என்று நம்புகிறேன் எ‌ன்று சோனியா காந்தி வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்