சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்!
வெள்ளி, 13 ஜூன் 2008 (10:31 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை (14ஆம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண்.0617) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
அதே போல், சென்னையில் இருந்து 15ஆம் தேதி நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0607) எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.40 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் கூடுதலாக வள்ளியூரில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.