மேட்டூர் அணை இன்று திறப்பு!

வியாழன், 12 ஜூன் 2008 (11:37 IST)
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இ‌ன்று மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்.

மேட்டூர் அணையின் 75 ஆண்டு கால வரலாற்றில் 15-வது ஆண்டாக குறிப்பிட்ட நாளில் ஜூன் 12ஆம் தேதி இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்