அரசு பணியில் இல்லாத மருத்துவ மாணவர்கள், தங்களையும் பட்ட மேற் படிப்பு கவுன்சிலிங்கில் உள்ள சிறப்பு துறைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
சென்னை பொது மருத்துவமனை யில் 1,500 பேர் இன்று காலை அரசு பொது மருத்துவமனை முன்பு திரண்டு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநர் ஆகியோர் மன்னிப்பு கேட்பதோடு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு டீன் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.