த‌மிழக‌ம் முழுவது‌ம் ம.‌‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

செவ்வாய், 10 ஜூன் 2008 (14:58 IST)
பெ‌ட்ரோ‌ல், டீச‌ல், சமைய‌ல் எ‌ரிவாயு ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்து மா‌நில‌ம் முழுவது‌ம் இ‌ன்று ம.‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

திரு‌ச்‌சி ர‌யி‌ல் ‌நிலைய‌ம் மு‌‌ன்பு ந‌ட‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு ம.‌தி.மு.க. துணை பொது‌ச் செயலாள‌ர் நாசரே‌த்துரை தலைமை தா‌ங்‌கினா‌ர். அ‌ப்போது அவ‌ர், ம‌‌‌த்‌திய அரசு உடனடியாக ‌விலை உய‌ர்வை ‌திரு‌ம்ப பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

மதுரை‌ அ‌‌ண்ணா பேரு‌ந்து ‌நிலைய‌ம் மு‌ன்பு நட‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்‌ட‌த்‌தி‌ற்கு மா‌நில துணை பொது‌ச் செயலாள‌ர் ம‌ல்லை ச‌த்யா தலைமை‌ தா‌ங்‌கினா‌ர். இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

இதேபோ‌ல் கரூ‌ர், புது‌க்கோ‌ட்டை, பெர‌ம்பலூ‌ர், அ‌ரியலூ‌ர் உ‌ள்பட மா‌நில‌ம் முழுவது‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நடைபெ‌ற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்