இளம் பெண்ணுடன் ஓடிய காவலர் ‌மீது நடவடி‌க்கை!

செவ்வாய், 10 ஜூன் 2008 (13:33 IST)
ஈரோடு அருகே இரவு க‌ண்கா‌ணி‌ப்பு‌ப் பணியில் இரு‌ந்தபோது அந்த வழியாக வந்த இளம்பெண்ணுடன் ஓடிய காவலர் மீது துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவினாஷ்குமார் தெரிவித்தார்.

ஈரோடு அருகே உள்ளது மொடக்குறிச்சி. இங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ரவி. இவர் சம்பவ தினத்தன்று திருட்டை தடுக்கவும் விபத்துக்களை தடுக்கவும் இரவு நேர க‌ண்கா‌ணி‌ப்பு‌ப் பணியில் ஈடுபடுமாறு அதிகாரிகள் உத்திரவிட்டனர்.

இதன்படி ரவி சீருடை அணி‌ந்து மொடக்குறிச்சி அருகில் உள்ள சோலார் பகுதியில் க‌ண்கா‌ணி‌ப்பு‌ப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பெண்ணுடன் மூன்று வாலிபர்கள் நடந்து வந்தனர். இவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அந்த பெண்ணுடன் சந்தோஷம் அனுபவிக்க மூன்று வாலிபர்கள் வந்தது தெரியவந்தது.

உடனே காவலர் ரவி அந்த மூன்று வாலிபர்களை விரட்டியடித்தார். பின் அந்த பெண்ணுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவசரமாக காவல் நிலையம் வரை செல்லவேண்டும் என வாகனத்தை வா‌ங்‌கி‌க் கொ‌ண்டு அ‌ந்த‌ப் பெண்ணை ஏ‌ற்‌றி‌க்கொ‌ண்டு சென்றுவிட்டார். விடியும்வரை வாகன‌ம் வராத காரணத்தால் வாகன உரிமையாளர் ராஜன் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அங்கு சென்றபோதுதான் ரவி காவல் நிலையம் வராதது தெரியவந்தது. சிறிது நேரத்தில் போதையுடன் ரவி காவல் நிலையம் வந்தார். இது குறித்து உயர் அதிகாரிளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தி ரவி மீது துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவினாஷ்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்