நளினியை விடுதலை செய்யக்கூடாது: உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியசுவாமி மனு!
செவ்வாய், 10 ஜூன் 2008 (09:58 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும். ஆகவே அவரை விடுதலை செய்யக் கூடாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள்தண்டனையை 17 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன் என்றும், ஆகவே என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தன்னையும் சேர்த்த விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஆயுள்தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், ஆகவே இவரை விடுதலை செய்யக்கூடாது என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று (10ஆம் தேதி) விசாரணைக்கு வருகிறது.