‌விலைவா‌சி உய‌ர்வை க‌ண்டி‌த்து ஜூ‌‌ன் 12 ஆ‌‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: சரத்குமார்!

திங்கள், 9 ஜூன் 2008 (16:56 IST)
பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஜூ‌ன் 12ஆ‌ம் தேதி சென்னை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு இலவச திட்டங்களை இர‌ண்டு ஆண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். விலைவாசியை குறைத்த பின்னர் நிதி நிலைமை சீரான பிறகு மீதியுள்ளவர்களுக்கு இல வச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி மற்றும் கியாஸ்களை வழங்கலாம்.

ம‌த்‌‌திய அரசு பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வை சமா‌ளி‌ப்பத‌ற்கு ‌மது, பா‌ன்பரா‌க், ‌சிகரெ‌ட் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌மீது ‌வ‌ரி ‌வி‌தி‌த்து அதனா‌ல் ‌கிடை‌க்கு‌ம் தொகையை கொ‌ண்டு ‌விலை உய‌ர்வை ஈடுக‌ட்டி இரு‌க்கலா‌ம்.

விலைவா‌சி உய‌‌ர்வை க‌ண்டி‌த்து‌ம், பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ம‌ற்று‌ம் சமைய‌ல் எ‌ரிவாயு ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்து‌ம் ஜூ‌ன் 12 ஆ‌ம் தே‌தி செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் ஹா‌ல் மு‌ன்பு எனது தலைமை‌யி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று ‌ச‌ர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்