23 ‌மீன‌வ‌ர்களை ‌மீ‌‌ட்க கோ‌ரி பிரதமருக்கு வைகோ கடிதம்!

திங்கள், 9 ஜூன் 2008 (16:11 IST)
சி‌றில‌ங்ககட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்ட 23 த‌மிழக ‌மீன‌வ‌ர்களை ‌மீ‌ட்க ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன்‌சி‌ஙது‌ரிநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ம.‌ி.ு.க. பொது‌சசெயலாள‌ரவைகேகடித‌மஎழு‌தியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றபிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழு‌தியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற் கொள்ளும் தொடர் தாக்குதலையும், அராஜகத்தையும் மிகுந்த கவலையோடும், வேதனையோடும் மீண்டும் தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கட‌ந்த 26ஆ‌மதே‌தி நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 த‌மிழமீனவர்கள் ‌சி‌றில‌ங்ககடற்படையினரால் அழைத்து செல்லப்பட்டனர். ‌சி‌றில‌ங்ககடற்படையின் காவலில் உள்ள மீனவர்களைப் பற்றியும் அவர்கள் பயனித்த படகுகள் பற்றிய விவரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ‌சி‌றில‌ங்ககடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கவும், 23 மீனவர்களையு‌மஅவர்களது படகுகளுடன் பாதுகாப்பாக விடுவிக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

கொழுந்து விட்டெரியும் இந்த பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டு இருக்கும் அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து, மீன்பிடித் தொழிலை அமைதியாகத் தொடர ‌‌மீனவ‌ர்க‌ளமனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுகிறேன் எ‌ன்றவைகேகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்