தமிழக சாலைகளை சீரமைக்க ரூ.4,179 கோடி ஒதுக்கீடு!

திங்கள், 9 ஜூன் 2008 (12:10 IST)
தமிழகத்தில் சாலைகளைச் சீரமைக்க ரூ.4,179 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளதாநெடுஞ்சாலை‌த்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூ‌றின‌ா‌ர்.

கன்னியாகுமரியில் புதிய படகு தொடக்க விழா நிகழ்ச்சியை துவ‌க்‌கி வை‌த்து அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌ன் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டில் ரூ.4,690 கோடி செலவில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில், 31,740 கி.மீ தொலைவிற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும், நடப்பு நிதியாண்டில் சாலைகள் சீரமைப்புப் பணிக்காக ரூ.4,179 கோடி நிதியினை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசாணை விரைவில் வெளியிடப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்