ஜெயங்கொண்டத்தில் இந்தியன் வங்கியின் 1547வது புதிய கிளை திறந்து வைத்து அவர் கூறுகையில், தமிழக அரசு மற்றும் நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த பூர்வாங்க பணிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்கப்படும். இந்த பணி அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என்றார் ராஜா.
ஜெயங்கொண்டம் அனல் மின் நிலைய திட்டத்தால் இந்த பகுதியில் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதோடு ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும். நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு அரசு வழிகாட்டுதல் மதிப்பு என்ன விலை கொடுக்குமோ அதை கொடுக்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் ராஜா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த திட்டம் வரும்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பங்கு அவசியம் தேவை. மாணவர்கள் படிக்க கல்வி கடனை தாராளமாக இந்தியன் வங்கி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜா கூறினார்.