இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவதும் கொலை செய்வதும் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. இந்த மோசமான பிரச்சினையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஜுன் 2 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர் சந்தியாகு இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க அனைத்து உரிமைகளும் உண்டு. தமிழக மீனவர்களை காப்பாற்றும் கடமையில் இருந்து இந்திய அரசு தவறிவிட்டது என்பதை மன வேதனையோடு குறிப்பிடுகிறேன்.
தாங்கள் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்திய கடற்படையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்.