சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு : இராமேஸ்வரம் மீனவர் பலி! பத‌ற்ற‌ம்!

செவ்வாய், 3 ஜூன் 2008 (13:57 IST)
45 நாள் தடைக்குப் பிறகு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

சிறல‌ங்க கட‌‌ற்படை‌த் து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து ராமே‌ஸ்வர‌‌ம் ‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்!

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 714 விசைப் படகுகளில் நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த சிறிலங்க கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

அப்பகுதியில், அந்தோணிபுரத்தைச் சேர்ந்த மைக்கேலுக்குச் சொந்தமாபடகில் (படகு எண் 244), அவரது மகன் சந்தியாகு (20), ஆரோக்கியராஜ், உறவினர்கள் எடிசன் (32), தபியா (20) ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

சிறிலங்க கடற்படையினரின் மிரட்டலையடுத்து, தங்கள் வலைகளை எடுத்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னதாகவே அவர்கள் மீது சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தியாகு என்பவர் பலியானார். சந்தியாகு தவிர மற்றவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.

பலியான சந்தியாகு உடல் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த சந்தியாகு உறவினர்கள், மீனவர்கள் ஒன்று திரண்டுள்ளனர். ‌மீனவ‌ர்க‌ளு‌‌ம் ‌மீ‌ன்‌பிடி‌க்க‌ச் செ‌ல்லாம‌ல் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

கோட்டாட்சியர் சந்திரன், மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேல்பாண்டியன் ஆகியோர் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுவதால் காவல் துணை கண்காணிப்பாளர் கமலாபாய் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்