என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம், சட்டப்படியான ஊக்கத்தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர் நல துணை முதன்மை ஆணையர் தலைமையில், என்எல்சி நிர்வாகிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர் பணி நிரந்தரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அது குறித்து எதுவும் பேச முடியாது என நிர்வாகிகள் கூறியதாகத் தெரிகிறது. இதர கோரிக்கைகளையும் நிர்வாகத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.