தமிழ்நாட்டில் 3 பல்கலை.: இடம் கேட்டு மத்திய அரசு கடிதம்!

சனி, 31 மே 2008 (15:58 IST)
தமிழ்நாட்டில் உலகத்தரத்திற்கு இணையான பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு நிலம் ஓதுக்கீடு செய்து அளிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது!

தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகங்கள் அமைப்பது குறித்து டெல்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கை தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்கனவே சந்தித்துப் பேசியிருந்தார்.

இதையடுத்து, கோவையில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றும், திருச்சியில் ஐ.ஐ.எம். ஒன்றும், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து கடந்த 23 ஆம் தேதி தமிழக அரசிற்கு அமை‌ச்‌ச‌ர் அ‌ர்ஜு‌ன் ‌சி‌ங் கடிதம் அனுப்பியுள்ளா‌ர்.

இதற்கான நிலத்தை ஒதுக்கி, இலவசமாக தமிழக அரசு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளா‌ர் என்று தமிழக அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்