கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கவுள்ள பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்!
கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் தங்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், தங்களது பதவிக் காலத்தில் சிறப்பாக பணிகளை நிறைவேற்ற எனது வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சனையில் கர்நாடக தேர்தல் முடியும் வரை அமைதி காப்பது என்று முடிவெடுத்திருந்த தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமையவுள்ள நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.