தீவிரவாதிகளுக்கு பணம்: ‌சித‌ம்பர‌ம் தடு‌க்காதது ஏ‌ன்? ஜெயலலிதா கே‌ள்‌வி!

வியாழன், 29 மே 2008 (13:59 IST)
அய‌ல்நாடுக‌ளி‌ல் இருந்து தீவிரவாதிகளுக்கு பணம் வருவதை நிதி அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 5-வது ஆண்டு ஜெய்ப்பூர் தொடர்குண்டு வெடிப்புடனும் கர்நாடக தேர்தல் முடிவுடனும் தொடங்கியிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செல்வாக்கு சரிந்து விட்டதை இது உணர்த்துகிறது.

அ‌திக‌ரி‌த்து வரும் பண வீக்கம் மற்றும் தீவிரவாதம் ஆகிய 2 ‌விடயங்களும் இந்திய மக்களை வாட்டி வதைக்கிறது. பணவீக்கம் பற்றி நான் ஏற்கனவே கூறிய புகார்களுக்கு நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இந்த இரு பிரச்சினைகளும் இணைந்து பொருளாதார தீவிரவாதத்தை உருவாக்கியுள்ளது. இதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சமாளிக்க முடியவில்லை.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக சபையி‌ன் கட்டடம் தகர்க்கப்பட்ட பிறகு அங்கு புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வந்தனர். தீவிரவாதிகளுக்கு பணம் அய‌ல்நாடுகளில் இருந்து வருவதும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதும் அங்கு ஒடுக்கப்பட்டது. நாட்டில் முதலீடுகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. இதன் பிறகு அங்கு புதிய தீவிரவாத தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் லண்டன் குண்டு வெடிப்புக்குப்பிறகு புதிய சட்டங்கள் கொண்டு வந்தார்கள். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் தீவிரவாதம் எங்கும் எப்போதும் பரவி வருகிறது. நாடாளும‌ன்ற‌த்தையும் கூட தீவிரவாதிகள் விட்டு வைக்கவில்லை. இந்திய அரசு என்ன செய்கிறது. உலக தாராளமயம் என்ற பெயரில் இந்தியாவில் தீவிரவாதிகளுக்கு அய‌ல்நாடுக‌ளி‌ல் இருந்து பணம் குவிகிறது.

இந்திய பொருளாதாரத்தையே இது சீர்குலைத்து விட்டது. பொடா சட்டம் ரத்து மூலம் இந்த சீரழிவுக்கு வழி வகுத்து விட்டது. இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகன் வ‌‌ங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அடையாள அட்டை `பான்' கார்டு முகவரி சான்று போன்றவை கேட்கிறார்கள். ஆனால் அய‌ல்நாட்டு முதலீட்டாளர்கள் உண்மைகளை மறைத்து அதிக அளவில் மறைமுகமாக முதலீடு செய்கிறார்கள். இதை தடுக்க நிதித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அய‌ல்நாடுக‌ளி‌ல் இருந்து தீவிரவாதிகளுக்கு பணம் வருவதை நிதி அமை‌ச்ச‌ர் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் எ‌ன்று ஜெயல‌லிதா கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்