''அமைதி திரும்ப வேண்டும் என்று கூறி வரும் இந்திய அரசு, சிறிலங்கா அரசுக்கு நிதியுதவி அளித்து வருவது எந்த வகையில் நியாயம்'' என்று இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தை பொறுத்த வரை ஜீரோ பாயிண்டுக்கு மேல் உள்ள பகுதியாக இருந்தால்தான் கர்நாடகாவிடம் அனுமதி கேட்க வேண்டும்.
ஜீரோ பாயிண்டுக்கு பிறகு உள்ள பகுதியில் திட்டத்தை நிறைவேற்ற நாம் கர்நாடகாவிடம் அனுமதி கேட்க தேவையில்லை. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் விரைந்து செயல்ட வேண்டும்.
விடுதலைப்புலிகளை அடக்குவதாக கூறி பொதுமக்கள் மீது சிறிலங்கா ராணுவத்தினர் தாக்குகிறார்கள், மனித உரிமைகள் மீறும் நாடுகளில் சிறிலங்கா முதலிடத்தில் உள்ளது. ஆனால் ஐ.நா.வில் உள்ள மனித உரிமை குழுவில் சிறிலங்காவை சேர்க்க இந்தியா முயற்சிக்கிறது.