‌செ‌ன்னை வ‌ந்த பி‌ரி‌‌ட்டி‌‌ஷ் ‌விமான‌த்‌தி‌ல் கோளாறு!

செவ்வாய், 27 மே 2008 (13:29 IST)
ல‌ண்ட‌னி‌‌லஇரு‌ந்தசெ‌ன்னவ‌ந்த ‌பி‌ரி‌ட்டி‌‌ஷஏ‌ர்வே‌ஸ் ‌விமான‌‌த்‌தி‌னச‌க்கர‌ங்க‌ள் ‌திடீரெஇய‌ங்காம‌லபோனதா‌ல் ‌விமா‌னி ப‌த்‌திரமாக ‌‌விமான‌த்ததரை‌யிற‌‌க்‌கினா‌ர். இதனா‌ல் 247 பய‌ணிக‌ளஅ‌தி‌ர்‌‌ஷ்டவசமாஉ‌யி‌ரத‌ப்‌பின‌ர்.

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தது. அதில் 247 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் அதிகாலை 3.20 மணிக்கு தரை இறங்க வேண்டும். இதற்காக 3 மணியளவில் விமானி விமானத்தில் சோதனை செய்தார்.

அப்போது விமானத்தி‌சக்கரங்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கு ‌விமா‌‌னி உடனடியாதகவல் தெரி‌வி‌த்தா‌ர்.

இதையடு‌‌த்து ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லமருத்துவ குழுவினர், தீயணைப்பு படையினர் தயாராநிறுத்தப்பட்டனர். பின்னர் விமானத்தை தரையில் இறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 90 ‌‌நி‌மிட‌த்‌தி‌ற்கு ‌பிறகு அதிகாலை 4.30 மணிக்கு விமானத்தை விமானி தரை இறக்கினார். இதனால் 247 பயணிகளும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.

அதன்பிறகு விமான‌த்‌தி‌லகோளாறச‌ரி செ‌ய்ய‌ப்ப‌ட்டவிமானம் லண்டன் புற‌ப்ப‌ட்டெ‌ன்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்