வட த‌மிழக‌த்த‌ி‌‌ல் பரவலாக மழை!

சனி, 24 மே 2008 (16:22 IST)
டத‌மிழக‌த்த‌ி‌ல் ஆ‌ங்கா‌ங்கே ஒரு ‌சில ‌இட‌ங்க‌‌ளி‌ல் நே‌ற்று மழை பெ‌ய்தது. அ‌திகப‌ட்சமாக ‌‌‌கீரனூ‌ர், குடியா‌த்த‌ம், ஓமலூ‌‌‌ர், அ‌ரியலூ‌ர் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் 4 செ.‌‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது.

வா‌ணிய‌ம்பாடி, பரம‌த்‌‌திவேலூ‌‌ர், ரா‌சிபுர‌ம், ஆ‌‌ம்பூ‌ர் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது.

வரு‌ம் ‌தி‌‌ங்க‌ட்‌கிழமை த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி கடலோர‌ப் பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் வெ‌‌ப்ப‌நிலை 39 ‌டி‌‌கி‌ரி செ‌ல்‌சியஸையொ‌ட்டி இரு‌க்கு‌ம். மாலையோ அ‌ல்லது இரவோ மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம்.

வேலூ‌ர், த‌ர்மபு‌ரி, ‌திருவ‌ண்ணாமலை, சேல‌ம், நாம‌க்க‌ல், ஈரோடு, ‌நீல‌கி‌ரி, கோய‌ம்பு‌த்தூ‌ர், ‌தி‌ண்டு‌க்க‌ல், கரூ‌ர், ‌திரு‌ச்‌சி, பெர‌ம்பலூ‌ர், தே‌னி, மதுரை, ‌‌சிவக‌ங்கை, ‌விருதுநக‌ர் ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ஒரு‌ ‌சில இட‌ங்க‌ளி‌ல் இலேசான முத‌ல் ‌மிதமான மழை பெ‌ய்ய‌க் கூடு‌‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்