நலத்திட்டங்களு‌க்கான வருமான உச்சவரம்பு அ‌திக‌ரி‌ப்பு: த‌மிழக அரசு!

சனி, 24 மே 2008 (11:56 IST)
''‌திருமண உத‌வி‌த்‌தி‌ட்ட‌ம் உ‌‌ள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கான பயனாளிகளின் உச்சவரம்பு ரூ.24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது'' என்று த‌மிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மூவலூ‌ர் ராமா‌மி‌ர்த‌ம் அ‌ம்மையா‌ர் நினைவு திருமண திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் பெண் குழந்தைகள் திருமண உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களின் திருமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக நிதியுதவி பெறுவதற்கும், சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்கள் நிதியுதவி பெறுவதற்கும் கு‌டு‌ம்ப ஆ‌ண்டு வருமான உ‌ச்சவர‌ம்பு ூ.12,000 என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபர் இறந்துவிட்டால் துயர் துடைப்பு நிதியுதவி பெறுவதற்காக ரூ.7,200 என்ற வருமான உச்சவரம்பு உள்ளது.

இந்த வருமான உச்சவரம்பு மிக குறைவாக உள்ளது என்ற அடிப்படையில், இந்த வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டுமென காங்கிரஸ் ச‌‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ‌திக எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் ஏழை எ‌ளிய குடு‌ம்‌ப‌ங்களை சே‌ர்‌ந்த பெ‌ண்க‌ள் பயனடைய வே‌ண்டுமெ‌ன்ற நோ‌க்க‌த்தோடு, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன் கோரிக்கையை ஏற்று மேற்கூறிய திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.24,000 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இத்திட்டங்களின் கீழ் அதிக அளவில் ஏழை எளியோர் பயனடைவர் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்